சூதாடிய 8 பேர் கைது

ஈரோடு, ஜூன் 25: பெருந்துறை பனிக்கம்பாளையத்தில் சூதாட்டம் நடப்பதாக பெருந்துறை போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் சோதனை நடத்தியதில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பிரோஜ்லஸ்கர்(35), ஜாகீர்நவுரேன்காஜூ(22), அஜ்கர் முல்லா(22) உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் பனிக்கம்பாளையத்தில் தங்கி பெருந்துறை சிப்காட் தொழிற்சாலைகளில் பணியாற்றி வருபவர்கள் என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ.3340 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: