விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் எச்சரிக்கை: திருச்சி அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் படம் அகற்றம், கிழிப்பு

திருச்சி, ஜூன் 25: திருச்சியில் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் படம் அகற்றப்பட்டதோடு கிழிக்கப்பட்டது. இது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையே பனிப்போர் நடந்து வருகிறது. சென்னை வானகரத்தில் நடந்த பொதுக்குழுவில் மேடையில் அவமதிக்கப்பட்டதால், அங்கிருந்து ஓபிஎஸ் வெளிநடப்பு செய்தார்.

இந்நிலையில், திருச்சி தில்லைநகரில் உள்ள அதிமுக வடக்கு மாவட்ட அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் படம் கிழிக்கப்பட்டதாம். முக்கியமாக, அலுவலகம் வெளியே வைக்கப்பட்டுள்ள பேனரில் ஓபிஎஸ் படம் மறைக்கப்பட்டுள்ளது. இதேபோல், திருச்சி புதுகை சாலையிலுள்ள தெற்கு மாவட்ட அலுவலகத்தில் ஓபிஎஸ் படம் அகற்றப்பட்டுள்ளது. இது ஓபிஎஸ் அணியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: