சிறுகமணியில் வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பூச்சி, நோய் மேலாண்மை பயிற்சி

திருச்சி ஜூன் 25: அந்தநல்லூர் வட்டாரத்தில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் உள்ள கிராமங்களில் இருந்து விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு நெல்லில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்த ஒருநாள் பயிற்சி வேளாண் அறிவியல் நிலையம், சிறுகமணியில் நடைபெற்றது. இப்பயிற்சிக்கு திட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்து நெல்லில் பயிர் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து பேசுகையில், நெற்பயிரை தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்கள் குறித்தும் தாக்கம்,

அறிகுறிகள், சேதாரம் மற்றும் ஒருங்கிணைந்த மேலாண்மை குறித்தும் தெளிவாக விளக்கி கூறினார். தொடர்ந்து இனக்கவர்ச்சிப்பொறிகள், விளக்கு பொறிகள் மற்றும் உயிரியல் கட்டுப்பாடு காரணிகள் குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. பயிர் பாதுகாப்பு பற்றிய கையேடு வெளியிடப்பட்டது. இதில் 35 வசாயிகள் பங்கேற்று பயன்பெற்றனர். முன்னதாக ஷீபா ஜாஸ்மின் வரவேற்றார். ஷீபா ஜாஸ்மின் நன்றி கூறினார்.

Related Stories: