ஒன்றிய அரசை கண்டித்து பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி, ஜூன் 25: அகில இந்திய பிஎஸ்என்ல் ஓய்வூதியர் சங்கத்தினர் ஒன்றிய அரசை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மன்னார்குடி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் ஒன்றிய அரசை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கிளை தலைவர் பாஸ்கரன் தலைமையில் அகில இந்திய பிஎஸ்என்ல் ஓய்வூதியர் சங்கத் தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சங்கத்தின் மாவட்ட செயலாளர் பிச்சைக்கண்ணு கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஓய்வூதியர்கள், 2017ம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய ஓய்வூதிய உயர்வு தொகை, நிலுவையில் உள்ள மருத் துவப் படிகள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான இடைக்கால நிவாரண தொகைகளை உடன் வழங்க வேண்டும். நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைகளை உடன் நிறைவேற்ற வேண்டும். பிஎஸ்என்ல் நிர்வாகத்திற்கு சொந்தமான செல்போன் டவர்களை தனியாருக்கு தாரைவார்ப்பதை கைவிட வேண்டும். பொதுத்துறை துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சியை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.

4ஜி அலைக்கற்றையை பிஎஸ்என்ல் நிர்வாகத்திற்கு உடன் வழங்க வேண்டும், தொழிற்சங்க விரோத போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில், கிளை பொருளாளர் சண்முகம் நன்றி கூறினார்.

Related Stories: