மழைநீர் வடிகால் அமைக்கும் பணி கல்வி நிறுவனங்கள் அரசின் கொரோனா தடுப்பு முறையை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்

திருவாரூர், ஜூன் 25: திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் கல்வி நிறுவனங்கள் அரசின் கொரோனா தடுப்பு முறையினை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் பொது இடங்களில் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது மற்றும் கை சுகாதாரம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்வதை தமிழக அரசு தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசு பணியாளர்கள் கோவிட்-19 தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள்.

பல அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் வருகை தரும் பொதுமக்கள் முககவசம் அணியாமலும் அல்லது பெயரளவில் சரிவர முககவசத்தை முறையாக அணியாமலும் இருந்து வருகின்றனர். தற்போது உள்ள காலகட்டத்தில் அதிக அளவில் இளைய வயதுடையோர் மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள் கோவிட் தொற்றால் பாதிப்படைந்து வருகின்றனர். மேலும் கோவிட் தொற்று கல்வி நிறுவனங்கள் மற்றும் விடுதிகளில் அதிகரித்து வருகிறது. துரதிஷ்டவசமாக பெற்றோர்கள் சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளுக்கு பரிசோதனை செய்து கொள்ளாமல் சாதாரண சளி தொந்தரவு என இருந்து வருகிறார்கள்.

குழந்தைகள் விளையாடும் தன்மை இருப்பதால் மற்ற குழந்தைகளுக்கும், சமூகத்திற்கும் எளிதில் நோய் தொற்று பரவும் அபாயம் இருந்து வருகிறது. எனவே, கல்வி நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள், பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு யாருக்கேனும் சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருப்பின் உடனடியாக பரிசோதனை செய்வது மற்றும் ஓய்வுஎடுப்பது போன்றவைகளை பின்பற்றிட வேண்டும். முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்துதல் போன்ற பழக்கங்களை தொடர்ந்து கடைபிடித்திட மாவட்டத்தில் இயங்கி வரும் பள்ளி நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள், அரசு அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Related Stories: