மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறந்த சேவை புரிந்தவர்கள் விருதுபெற விண்ணப்பிக்கலாம்

திருவாரூர், ஜூன் 25: திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு தமிழக அரசின் விருதுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரதினவிழா அன்று மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்த சமூக பணியாளர் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு தமிழக அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி நடைபெறும் சுதந்திரதின விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்த சமூக பணியாளர்,

மருத்துவர், தொண்டு நிறுவனம், வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு விருதுகள் தமிழக முதல்வரால் 10 கிராம் தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. எனவே,மேற்காணும் விருதிற்கு திருவாரூர் மாவட்டத்தில் தகுதியான நபர்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், அறை எண்.6, கலெக்டர் அலுவலக வளாகம், திருவாரூர் - 610004. என்ற முகவரியில் விண்ணப்பம் பெற்று உரிய ஆவணங்களுடன் அடுத்த மாதம் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Related Stories: