ஐம்பொன்சிலைகள் ரூ.2 கோடிக்கு விற்க முயற்சி

கும்பகோணம், ஜூன்.25: கும்பகோணத்தில் விருத்தாச்சலம் அருகே இருப்பைகுறிச்சி கிராமத்தில் இரண்டு தொன்மையான ஐம்பொன் சிலைகளை 2 கோடி ரூபாய்க்கு வெளிநாட்டில் விற்க முயற்சிப்பதாக சிலை திருட்டு தடுப்பு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த சிலைகளை கூடுதல் விலை கொடுத்து வாங்குவது போல் நடித்து அந்த இரு சிலைகளையும் கைப்பற்றியதுடன், சிலைகளை விற்க முயன்ற மகிமைதாஸ் மற்றும் பச்சைமுத்து ஆகிய இருவரை கைது செய்தனர். ஒரு அடி உயரமுள்ள மாரியம்மன் சிலை, ஒன்னேகால் அடி உயரமுள்ள பெருமாள் சிலை ஆகியவை கைப்பற்றப்பட்டது.

இச்சிலைகளை விற்க முயன்ற இருப்பை குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மகிமை தாஸ் மற்றும் பெரிய கோட்டை மேடு பகுதியைச் சேர்ந்த பச்சைமுத்து ஆகியோரை சிலை திருட்டு தடுப்பு காவல்துறையினர் கைதுசெய்து இருவரையும் கும்பகோணம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1ல் நீதிபதி பாரதிதாசன் முன்னிலையில் நேற்று மாலை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட இரு ஐம்பொன் சிலைகளையும் இதே நீதிமன்றத்தில் சிலை தடுப்பு காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

Related Stories: