இன்று நடக்கிறது சொத்து முன்விரோத தகராறு: பெரியப்பா கல்லால் குத்திக் கொலை

பட்டுக்கோட்டை, ஜூன். 25: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை கண்டியன்தெருவைச் சேர்ந்தவர் தேவேந்திரன் (65). இவரது தம்பி ரவிச்சந்திரன். இவரது மகன் வீரசிங்கம். இந்நிலையில் தேவேந்திரனுக்கும், வீரசிங்கத்திற்கும் சொத்து சம்மந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் தேவேந்திரன் நேற்று மாலை அவரது வீட்டு முன்பு நின்று கொண்டிருக்கும்போது அங்கு வந்த வீரசிங்கம் தேவேந்திரனை தகாத வார்த்தைகளால் திட்டி கல்லால் குத்தி தலையில் அடித்தார். இதில் சம்பவ இடத்திலேயே தேவேந்திரன் பரிதாமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை நகர இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் இறந்துபோன தேவேந்திரனின் உடலை கைபற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து இறந்துபோன தேவேந்திரனின் மகள் தேவிகா (37) பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் பட்டுக்கோட்டை நகர போலீசார், வீரசிங்கம் மற்றும் அவரது தாய் மலர்க்கொடி ஆகியோர் மீது வழக்குப்பதிந்து 2 பேரையும் தேடி வருகின்றனர். இச்சம்பவம் பட்டுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜூன் 30ம்தேதிக்குள் குறுவை நாற்றுவிட்டு ஜூலை 15ம் தேதிக்குள் நடவுசெய்வதே சிறந்தது

தஞ்சாவூர், ஜூன்25:தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை அறுவடை சமயத்தில் மழையால் ஏற்படும் பாதிப்புகள் குறைவாக இருக்கும். எனவும் அதனால் விவசாயிகள்குறுகிய கால இரகங்களான ஆடுதுறை 36, ஆடுதுறை 43, கோ 51, டிபிஎஸ் 5. ஆடுதுறை 53, ஏஎஸ்டி 16. ஆடுதுறை 37 போன்ற இரகங்களை உடன்நாற்றுவிட்டு நடவு செய்ய வேண்டும். மேட்டுபாங்கான வயல்களில் திருந்திய நெல்சாகுபடி முறையில் நாற்று விட்டு நடவு செய்தால் அதிக மகசூல் கிடைக்கும். பள்ளமான வயல்களில் பட்டம் போட்டு நடவு செய்வது சிறந்தது.சான்று பெற்ற நெல் விதைகளை 10 பாக்கெட் அசோஸ்பைரில்லம், 1பாக்கெட் பாஸ்போபாக்டீாயா, கொண்டு விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

விதை மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்த ஒரு கிலோ விதைக்கு10கிராம் சூடோமோனாஸ் எதிர் உயிர் பாக்டீரியம் கலந்து தண்ணீரில் 20மணிநேரம் ஊறவைத்து பின்னர் விதைக்க வேண்டும். 1 ஏக்கர் நாற்றுகளை 150 மி.லி. அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா கரைசலில் நனைத்து நடவேண்டும். நடவின் போது 200 மி. திரவஅசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியாவை நடவு வயலில் தெளிக்கவேண்டும். நாற்றங்காலில் 1 செண்டுக்கு 2 கிலோ வீதம் டிஏபி அடியுரமாகஇடவேண்டும். களிவாகு மண்ணாக இருந்தால் நாற்று பறிப்பதற்கு 24 மணிநேரத்திற்கு முன்பு 1 செண்டிற்கு 1 கிலோ வீதம் ஜிப்சம் இட்டு நாற்று பறிக்கவேண்டும்.நடவு வயலில் 1 ஏக்கருக்கு 5 டன் மக்கிய தொழு உரம் அல்லது 1 டன் மண்புழு உரம் ஒரு வாரத்திற்கு முன் வயலில் சீராக பரப்பி உழவு செய்யவேண்டும்.

நெற்பயிரை தொடர்ச்சியாக சாகுபடி செய்யப்படும் பகுதிகளிலும் களர் உவர்நிலங்களிலும் அதிக அளவு துத்தநாக சத்து குறைபாடு காணப்படுகிறது. எனவே

நடவு பயிர் கரைந்து விடாமல் அதிக தூர் வெடித்து வளரவும், அதிகமான மகசூல்பெறவும், நடவு செய்யும் முன் ஏக்கருக்கு 5 கிலோ நெல் நுண்சத்து உரம் மற்றும்10 கிலோ ஜிங்க் சல்பேட் உரத்தை 25 கிலோ மணலுடன் கலந்து இடவேண்டும்.குறுவை நெற்பயிருக்கு அடியுரமாக 44 கிலோ டிஏபி, யூரியா 25 கிலோ.பொட்டாஷ் 17 கிலோ. ஜிப்சம் 100 கிலோ இடவேண்டும். இவ்வாறு நாற்றுவிட்டுநடவு வயலுக்கு அடியுரமிட்டு குறுவை மகசூலை பெருக்க வேண்டும் என வேளாண்துணை இயக்குநர், உழவர் பயிற்சி நிலையம், பாலசரஸ்வதிஉழவர்பயிற்சி நிலைய அமைப்பாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு தெரிவித்துள்ளனர்

Related Stories: