தஞ்சாவூர் பேருந்து நிலைய கடைகளில் மாநகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு

தஞ்சாவூர், ஜூன் 25: தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், நேற்று காலை ”எனது குப்பை, எனது பொறுப்பு” என்ற திட்டத்தின் அடிப்படையில் அனைத்து கடைகளிலும் ஆய்வு செய்தார். அப்போது கடைகளில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளதா என சோதனையிட்டார். பின்னர் பஸ்நிலையத்தில் கொட்டப்படும் குப்பைகளை உரிமையாளர்களே சுத்தம் செய்யும்படி உத்தரவிட்டார்.

இதேபோல் பஸ்நிலையத்தில் உள்ள 41 கடைகளிலும், கடைகள் தூய்மையாக உள்ளதா, சுகாதாரமான முறையில் மக்களுக்கு பொருட்கள் வினியோகிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தார். மேலும் பழைய பேருந்து நிலையத்தில் சுற்று சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள், விளம்பரங்களை, குப்பைகளை சுத்தம் செய்யும்படி மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது நகர்புற ஆய்வாளர் நமச்சிவாயம் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் உடன் இருந்தனர்.

Related Stories: