பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்

பொன்னமராவதி,ஜூன் 25: பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொன்னமராவதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் ஒன்றிய செயலர் செல்வம் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஏனாதி ராசு, தர்மராஜன் பங்கேற்று மாவட்ட நிர்வாகக்குழு முடிவினை விளக்கி பேசினர். கூட்டத்தில் பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். பொன்னமராவதி டிஎஸ்பி அலுவலகத்தின் கீழ் செயல்பட்ட காரையூர் காவல் நிலையம் தற்போது இலுப்பூர் டிஎஸ்பி அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

எனவே காரையூர் காவல்நிலையம் பொன்னமராவதி டிஎஸ்பியின் கீழ் செயல்பட நடவடிக்கை எடுக்கவேண்டும். பொன்னமராவதியில் ஆர்டிஓ அலுவலகம் அமைக்க வேண்டும். பொன்னமராவதியிலிருந்து அரசமலை, நெறிஞ்சிக்குடி, குடுமியான்மலை வழியாக திருச்சி சென்ற பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது. இப்பகுதிமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் நலன் கருதி இதே வழித்தடத்தில் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். வரும் 27, 28 மாநாட்டு பேரணியில் பொன்னமராவதி வட்டாரத்திலிருந்து திரளாக பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் கட்சி வளர்ச்சி உறுதிமொழி எடுக்கப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய துணை செயலாளர்கள் கருணாமூர்த்தி, செல்வி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அழகு, பஞ்சவர்ணம், ராசு, குமார், தேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: