நெல்அறுவடை முடிவடையும் வ ரை நெல் கொள்முதல் நி லையங்களை திறந்து வை த்து கொள்முதல் செய்ய வேண்டும்: விவசாயிகள் சங் கம் வேண்டுகோள்

பெரம்பலூர்,ஜூன்25: நெல்அறுவடை முடிவடையும் வ ரை நெல் கொள்முதல் நி லையங்களை திறந்து வை த்து கொள்முதல் செய்ய வேண்டும் எனபெரம்பலூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங் கம் வேண்டுகோள் விடுத்தது. பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர்  வெங்கடப்பிரியா தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது.கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் நீலகண்டன்பேசியதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் உரத் தட்டுப்பாடு உள்ள இடங்களுக்கு தேவையான அளவுக்கு உர விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிலஇடங்களில் நெல் அறுவடை இன்னும் முழுமையாக முடிவடையா ததால் நெல்அறுவடை முழு மையாக முடிவடையும் வ ரை நெல் கொள்முதல் நி லையங்களைத் திறந்து வைத்துகொள்முதல் செய் யவேண்டும் எனத்தெரிவி த்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச்செயலாளர் செல்லதுரைபேசியதாவது :சிறப்பு பொருளாதார மண் டலம் திட்டம் 15 ஆண்டுக ளாகியும் இன்னும் நிறை வேற்றப்படவில்லை. என வே, இந்தத்திட்டத்துக்காக கையகப்படுத்திய சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்களை அதன் உரிமையாளர்களிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும். வெங்காயம் சேமிப்புக் கொட்டகைக்கான

மா னியத் திட்டம் பலவகைக ளில் விவசாயிகளுக்கு பய னுள்ளதாக இருக்கிறது.

எனவே, பெரம்பலூர் மாவ ட்டத்தில் வெங்காய கொட் டகை அமைக்கும் திட்டத்து க்கு கூடுதலாக நிதிகேட்டு பெறவேண்டும் எனத்தெரி வித்தார்.அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநில க்குழு உறுப்பினர் ரமேஷ் பேசியதாவது: தனியார் உர விற்பனையாளர்கள் உரங்களை பதுக்கி வைத் துக்கொண்டு, செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்கு கின்றனர். தனியார் உர வி ற்பனை மையங்களைக் கண்காணித்து, விதி மீற லில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித் தார்.தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ராஜா சிதம்பரம் பேசியதாவது: தரமான மக்காச்சோளம், பருத்தி விதைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். சாமான்ய மக்களுக்கு மிகவும் பலனுள்ளதாக இரு ந்த சிறுவாச்சூர் வாரச்சந் தை மீண்டும் நடைபெற நட வடிக்கைஎடுக்கவேண்டும் எனத் தெரிவித்தார். கூட்ட த்தில் மேலும் பல விவசாயிகள் சங்கபிரதிநிதிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப்பேசினர்.

Related Stories: