×

தினமும் மாலையில் தோகைமலையில் ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சுத்திறன் : வளர்த்தல் குறித்த பயிற்சி

தோகைமலை, ஜூன் 25: கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளியின் 4ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்கான ஆங்கிலம் பேச்சுத்திறன் வளர்த்தல் குறித்து பயிற்சிகள் நடந்தது. தமிழக அரசின் வழிகாட்டுதல்படி கரூர் மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவனம் மற்றும் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில் தோகைமலை ஒன்றியத்தில் 2 மையங்களில் தனித்தனியே பயிற்சிகள் நடந்தது. இதில் 4ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 நாள் பயிற்சியும், கீழவெளியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சியும் நடந்தது.

இதில் எளிய முறையில் மாணவர்கள் மத்தியில் எப்படி ஆங்கிலம் மொழியை கற்பிப்பது, பேசுவது, எழுத வைப்பது என்ற தலைப்பில் எடுத்துக்காட்டுடன் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த பயிற்சியில் 4ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் 109 பேரும், 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் 53 பேரும் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இதில் தோகைமலை வட்டார கல்வி அலுவலர் ராஜலெட்சுமி, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் ராஜகுமாரி, வட்டார வள மேற்பார்வையாளர் தமிழ்செல்வன், தலைமை ஆசிரியர்கள் வளர்மதி, சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tokaimalai ,
× RELATED பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க...