விஜயகாந்த் பூரண உடல் நலம் பெற வேண்டி மேலவாசல் முருகன் கோயிலில் தேமுதிகவினர் சிறப்பு வழிபாடு

நெல்லை, ஜூன்25: தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் பூரண உடல் நலம் பெற வேண்டி மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் பாளை தெற்கு பஜார் மேலவாசல் முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட பொறுப்பாளர் சண்முகவேல் தலைமை வகித்தார். அவைத்தலைவர் மாடசாமி, பகுதி செயலாளர்கள் வால்ஸ்ஷேக், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில ெநசவாளர் அணி செயலாளர் மீனாட்சிசுந்தரம் பங்கேற்றார்.

பகுதி செயலாளர்கள் மணிகண்டன், தமிழ்ச்செல்வன், மானூர் ஒன்றியம் வேல்பாண்டி, சின்னதம்பி, கிருஷ்ணகுமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் எம்.எஸ்.முருகன், மகளிரணி துணைச் செயலாளர் ரசீதாபானு, விஜயகாந்த் மன்ற செயலாளர் மாரியப்பன், துணைச் செயலாளர் லாலாபாரதி, பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள் தவசிமுருகன், இருதயராஜ், வேல்முருகன், பாபுராஜ், தங்கப்பன், வாஞ்சிநாதன், ஆறுமுகபிரியன், இசக்கி, வேலாயுதம், அமல்ராஜ், ரபீக், அனஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாவட்ட துணைச்செயலாளர் பூக்கடை செல்வகுமார் செய்திருந்தார்.

Related Stories: