சவுடு மண் கடத்திய பாஜ பிரமுகர் கைது: 2 லாரிகள் பறிமுதல்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே அனுமதியின்றி மண் கடத்திய 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து  இதுதொடர்பாக உரிமையாளரான பாஜ பிரமுகரை கைது செய்தனர். பெரியபாளையம் அடுத்த சின்ன கிளாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார். பாஜ பிரமுகர். இதற்கிடையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு  பெரியபாளையம் போலீசாருக்கு சின்ன கிளாம்பக்கத்தில் உள்ள விளைநிலம் மற்றும் அருகாமையில் உள்ள அரசு நிலத்திலும்  அனுமதியின்றி சவுடு மண் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில், பெரியபாளையம் காவல்துறை ஆய்வாளர் தரணி ஈஸ்வரி மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர்.

அப்போது, அனுமதியின்றி 2 லாரிகள் மூலம் மணல் கடத்தி இருந்தது தெரியவந்தது. இதற்கு முன்னதாக, போலீசார் வருவதை கேள்விப்பட்ட மண் கடத்திய லாரி டிரைவர்கள் லாரியை அங்கேயே விட்டுவிட்டு, அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டனர். இதனையடுத்து, 2 லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிந்து  லாரியின் உரிமையாளர் சரத்குமாரை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவரை ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் சிறையில் அடைத்தனர்.

Related Stories: