அக்கரம்பாக்கம் ஊராட்சியில் நடுநிலைப்பள்ளிக்கு சமையல் அறை கட்டிடம் கட்ட வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

ஊத்துக்கோட்டை: அக்கரபாக்கம் ஊராட்சியில் உள்ள நடுநிலைப் பள்ளிக்கு சமையல் கூட கட்டடம் கட்டித்தர வேண்டும் என்று  அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே உள்ள அக்கரபாக்கம் ஊராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளி  இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 1 முதல் 8 வரை அப்பகுதியில் உள்ள சுற்றுப்பகுதியில் உள்ள சுமார் 110 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

 பள்ளிக்கூடத்தில் சமையல் கூடம் பழுதடைந்த நிலையில் உள்ளது.

சமையல் கூடம் இல்லாததால் அருகே உள்ள பழுதடைந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் சமையல் செய்து வருகின்றனர். மழைக்காலம் வந்துவிட்டால்  தண்ணீர் உள்ளே வந்து அரிசி, பருப்பு, சமையல் பொருட்கள்  சேதமடைகின்றன. மேலும் சமையல் செய்யவும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே புதிய சமையல் கூடம் கட்டடம் கட்டி தரவேண்டும் என  அப்பகுதி மக்களும் மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: