மின்கட்டணம் கட்ட சென்றவர் சாலையில் மயங்கி விழுந்து சாவு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கத்தில் மின் கட்டணம் கட்ட சென்றவர் உடல் நலக் குறைவால் மயங்கி விழுந்தவர் உயிரிழந்தார். கடம்பத்துார் ஒன்றியம் விஸ்வநாதபுரம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முனுசாமி(42). இவருக்கு நிர்மலா(38) என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். வெல்டரான முனுசாமி சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மின்சார வாரிய அலுவலகத்தில் கரண்ட் பில் கட்ட சென்றுள்ளார்.

அப்போது பேரம்பாக்கத்தில் சாலையில் திடீரென முனுசாமி மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து அருகிலிருந்தவர்கள் மீட்டு பேரம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் முனுசாமி ஏற்கனவே இறந்துவிட்தாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நிர்மலா கொடுத்த புகாரின்பேரில் மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: