×

வறுத்த கறியில் மசாலா எங்கே? அடிதடியில் ஈடுபட்ட 3 பேர் கைது

தாம்பரம்: சேலையூரை சேர்ந்த ராஜா எம்.ஜி.ஆர் நகர் அருகே பாஸ்ட் புட் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது கடைக்கு சொகுசு காரில் போதையில் வந்த 3 பேர், புரோட்டா மற்றும் வறுத்தக்கறி பார்சல் கேட்டுள்ளனர். அப்போது வறுத்தகறியில் மசாலா இல்லை என கூறி கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஒரு கட்டத்தில் அடிதடி தகராறில் ஈடுபட்டனர். தகவலறிந்த சேலையூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடையின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றினர்.மதுராந்தங்கம் பகுதியை சேர்ந்த அரவிந்த் (22), சேலையூர், பாரத் நகரை சேர்ந்த சதீஷ்குமார் (20), மதுராந்தகம் பகுதியை சேர்ந்த ரோஹித் விக்கி (27) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மேலும் அவர்களுடன் தகராறில் ஈடுபட்ட சிறுவனை சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினர். 

Tags :
× RELATED கடை பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரம் கொள்ளை