ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை

சிதம்பரம், ஜூன் 14: சிதம்பரம் அருகே உள்ள குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்புராஜ். இவரது மனைவி ராதிகா (32). இவர் உடல்நலக்குறைவால் வெங்காயதலைமேடு கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி இருந்துள்ளார். நேற்று காலை வல்லம்படுகை மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற ராதிகா, வேளக்குடி என்ற இடத்தின் அருகே சென்றபோது திடீரென தண்டவாளத்தில் சென்ற ரயில் என்ஜின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில் இவரது உடல் இரண்டு துண்டுகளாக சிதறியது. இதுபற்றி தகவலறிந்த சிதம்பரம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார், சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ராதிகாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அவரது தந்தை மதியழகன் அளித்த புகாரின்பேரில் சிதம்பரம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ராதிகா உடல்நலக்குறைவு காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில் ரயில் என்ஜின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related Stories: