கிருஷ்ணா பேக்கரி, ஸ்வீட்ஸ் கடை திறப்பு

நெய்வேலி, ஜூன் 14: நெய்வேலி வடக்குத்து ஊராட்சி என்எல்சி ஆர்ச் கேட் எதிரில் வடலூர் கிருஷ்ண பவன் உயர்தர சைவ உணவகம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா பேக்கரி, ஸ்வீட்ஸ் கடை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. பண்ருட்டி, வடக்குத்து எஸ்.வி. ஜூவல்லரி உரிமையாளர் வைரக்கண்ணு தலைமை தாங்கினார். பண்ருட்டி ஜே.கே. ஆர் டெக்ஸ்டைல் உரிமையாளர் ஜெயபால் முன்னிலை வகித்தார். கிருஷ்ண பவன் உணவகம் மற்றும் பேக்கரி ஸ்வீட்ஸ் உரிமையாளர்கள் பிரகாஷ், பிரதீப், பிரசாந்த் ஆகியோர் வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் பண்ருட்டி நிர்வாக அறங்காவலர் ஆர்யவைஸ்ய சமுகம் மற்றும் தமிழ்நாடு மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன் கலந்துகொண்டு உயர்தர சைவ உணவகம், பேக்கரி மற்றும் ஸ்வீட்ஸ் கடையை திறந்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார். மணிமேகலை கிருஷ்ணகுமார் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். மணிமேகலை சவுந்தரபாண்டியன் முதல் விற்பனையை பெற்றுக்கொண்டனர். இதுகுறித்து கடையின் உரிமையாளர்கள் கூறுகையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகள் சிறந்த கலைஞர்கள் மூலம் உயர்தர சைவ உணவுகள் தயாரிக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வர்த்தக சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories: