கலெக்டர் ஆய்வு பொன்னமராவதி பகுதியில் 113 அரசு பள்ளிகளில் இலவச புத்தகம் வழங்கல்

பொன்னமராவதி,ஜூன் 14: பொன்னமராவதி பகுதியில் உள்ள 113 அரசு பள்ளிகளில் நேற்று இலவச புத்தகம் வழங்கப்பட்டது. தமிழகத்தில் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் நேற்று முதல் திறக்கப்பட்டது. இதனையடுத்து பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள கருப்புக்குடிப்பட்டி, வேந்தன்பட்டி, ஏனாதி பிடாரம்பட்டி, வேகுப்பட்டி, பி.உசிலம்பட்டி, காட்டுப்பட்டி, கொன்னையூர், கொன்னைப்பட்டி, அஞ்சுபுளிப்பட்டி, தூத்தூர், அம்மன்குறிச்சி, காரையூர், ஒலியமங்களம், சேரனூர், கூடலூர், அரசமலை, நெறிஞ்சிக்குடி, மேலமேலநிலை, கேசராபட்டி, புதுப்பட்டிஉட்பட 84 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், பொன்.புதுப்பட்டி, கட்டையாண்டிபட்டி, பிச்சக்காலான்பட்டி, மைலாப்பூர், கண்டியாநத்தம், இடையாத்தூர், கொன்னையம்பட்டி, கல்லம்பட்டி, மரவாமதுரை, ஆலம்பட்டி, செம்பூதி உள்ளிட்ட 18 ஊராட்சி ஒன்றிய நடுலைப்பள்ளி, திருக்கம்பூர், கருப்புக்குடிப்பட்டி, வார்பட்டு 3அரசு உயர்நிலைப்பள்ளி, மேலைச்சிவபுரி, ஆலவயல், நகரப்பட்டி, சடையம்பட்டி, காரையூர், மேலத்தானியம், நல்லூர் உள்ளிட்ட 8அரசு மேல்நிலைப்பள்ளி என 113அரசு பள்ளியில் பயிலும் ஒன்று முதல் 10ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அரசின் இலவச பாடப்புத்தகம் வழங்கப்பட்டது. உள்ளாட்சிப்பிரதிகள், தலைமையாசிரியர்கள். ஆசிரியர்கள் பாடப்புத்தகங்கள் வழங்கினர்.

Related Stories: