மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

பெரம்பலூர்,ஜூன்14: பெரம்பலூரில் இன்று (14ம்தேதி) மின்நுகர்வோர் குறை தீர்கூட்டம் நடைபெறுகிறது என கோட்டசெயற்பொறியாளர் ராஜேந்திர விஜய் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மின் கோட்டத்திற்குட்பட்ட நுகர்வோர்களின் குறைகளை தீர்க்கும் வகையில், பெரம்பலூர் 4 ரோடு அருகேயுள்ள, மின் வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில், இன்று (14ம்தேதி) காலை 11மணிமுதல் பகல் 1மணி வரை, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் மேற்பார்வை பொறியாளர் தலைமையில், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: