இடப்பிரச்னை காரணமாக பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு பெற்றோர், தம்பியுடன் தீக்குளிக்க பெட்ரோலுடன் வந்த விவசாயி போலீசார் தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்து விசாரணை

பெரம்பலூர்,ஜூன் 14: பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு பெற்றோர், தம்பி யுடன் தற்கொலை செய்து கொள்வதற்காக 2 லிட்டர் பெட்ரோல் கேன்களுடன் வந்த நக்கசேலம் விவசாயி குடும்பத்தாரால் பரபரப்பு ஏற்பட்டது. வாய்பேச முடியாத மாற்று த்திறனாளியைத் தாக்குவதாக தந்தை கண்ணீருடன் புகார் அளித்தார். பெரம்பலூர் மாவட்டம், ஆ லத்தூர் தாலுகா, நக்கசேலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் திருமுருகன் (25). ஏற்கனவே தனியார் டயர்  தொழிற்சாலையில் வேலை பார்த்து விட்டு தற்போது தந்தையுடன் சொந்த வயலில் விவசாய வேலை செய்து வருகி றார்.நக்கசேலம் ஊரிலிருந்து இவரின் காட்டிற்குச் செல்லும் வழித்தடமான ஓடைப் புறம்போக்கு பகுதியை அதே ஊரைச்சேர்ந்தவர் ஆக்கிரமித்து இருப்பதாகவும், இதனால் கடந்த 5 வருடங்களாக தங்களால் விவசாயம் செய்ய முடியவில்லை என்றும், இது சம்பந்தமாக பல தடவை மனு கொடுத்தும் இது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், 2020ல் பாதை பிரச்னை சம்பந்தமாக இரு தரப்பினருக்கும் அடிதடி பிரச்னை நடந்து, பாடாலூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப் பதாகவும், 2018 முதல் 10 முறைக்குமேல் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப் படவில்லையாம். இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது என்று கூறி நேற்று திருமுருகன், அவரது தந்தை பழனிச்சா மி(55), தாய் சசிகலா(45), வாய்பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனா ளியான தம்பி தினேஸ்(23) ஆகிய நால்வரும் ஒரு லிட் டர் அளவுள்ள 2 வாட்டர் பாட்டில்களில் 2லிட்டர் பெட்ரோலுடன் நேற்று பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.அவர்களை கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா முன்பு தடுத்து நிறுத்திய பாதுகாப்பு பணியில் இருந்த போ லீசார், 2லிட்டர் பெட்ரோல் பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் அழுதபடி பேசிய திருமுருகனின் அப்பா பழனிச்சாமி, என து வாய்பேச முடியாத மக னையும் அடித்து உதைக்கிறார்கள். அங்கு அவர்களால் சாவதற்குப் பதில் இங்கு நாங்களே தற்கொலை செய்து கொண்டு சாகிறோம் எனக்கூறி கதறினார். பிறகு பெட்ரோல் கேன்களை திறந்து சாலையோரம் தரையில் கொட்டிவிட்டு, பழனிச்சாமியை கலெக்டரிடம் மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அவர்களிடம் ஆலத்தூர் தாசில்தார் முத்துக்குமார் புகார் மனு குறித்து விசாரணை நடத்தி, விரைவில் தீர்த்து வைப்பதாக உறுதியளித்தார்.நேற்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகன் கள் இருவரென 4 பேர் பெட்ரோல் பாட்டில்களுடன் பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்திற்கு தீக்குளித்து தற்கொலை செய்ய வந்திருந்தது மிகுந்த பர பரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: