கூட்டுக்குடிநீர் திட்டம் வேண்டாம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை 3 கிராம மக்கள் முற்றுகை போராட்டம்

பெரம்பலூர்,ஜூன்14:கூட்டுக் குடிநீர்த்திட்டம் வேண்டாம் என லெப்பைக்குடிகாடு, கீ ழக்குடிகாடு, பெண்ணக் கோணம் ஆகிய 3கிராமப் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை யிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, லெப்பைக்குடிக்காடு பேரூராட்சியை ஒட்டியே மாவட்டத்தின் வடக்கு எல்லையாக வெள்ளா று செல்கிறது. இந்த ஊரை யொட்டி வெள்ளாற்றில் வே ப்பூர் கூட்டுக் குடிநீர்திட்டம் செயல்படுத்துவதை, நீர் ஆதாரம் உள்ள, அணை க்கட்டுக்கு அருகே தள்ளி அமைத்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகி றது. கூட்டுக்குடிநீர்த் திட்ட த்தை வேறு பகுதிக்கு மாற்றிஅமைக்க வேண்டி, லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி மக்கள், அதனருகேயுள்ள கீழக்குடிக்காடு, பெண்ண கொணம் ஆகிய ஊர்களில் இருந்து சுமார் 500க்கும் மே ற்பட்ட பொதுமக்கள்நேற்று பெரம்பலூர்மாவட்ட கலெக் டர் அலுவலகத்திற்குத் திர ண்டு வந்து முற்றுகையிட்ட னர். அவர்களை பாதுகாப்பு போலீசார் சிறுவர் பூங்கா முன்பே தடுத்து நிறுத்தினர்.

Related Stories: