×

2 வார விடுமுறைக்கு பிறகு கரூர் மாவட்டத்தில் 1041 பள்ளிகள் திறப்பு

கரூர், ஜூன்14: இரண்டு வார விடுமுறைக்கு பிறகு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்பட ஆரம்பித்துள்ளதால் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு சென்றனர். 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கடந்த மாதம் பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு, விடுமுறை விடப்பட்டது. தேர்வுகளுக்கு பிறகு அனைவருக்கும் இரண்டு வாரங்கள் விடுமுறை விடப்பட்டன.இந்நிலையில், 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை ஜூன் 13ம்தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதன்படி, கரூர் மாவட்டத்தில் நர்சரி, நர்சரி மற்றும் பிரைமரி, துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 1041 பள்ளிகள் உள்ளன. நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், அந்தந்த பகுதிகளில் வசிக்கும் மாணவ, மாணவிகள் முதல் நாளான நேற்று மிகுந்த ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு சென்றனர். ஆசிரியர்களும் ஆண்டின் முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை ஆர்வத்துடன் வரவேற்று பாடங்களை நடத்தினர். ஏற்கனவே பயின்ற நிலைகளில் இருந்து அடுத்த நிலைக்கு மாணவ, மாணவிகள் நேற்று முதல் பயில ஆரம்பிப்பார்கள் என்பதால் ஒருவித சந்தோஷம் மற்றும் எதிர்பார்ப்புகளுடன் மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Karur district ,
× RELATED கரூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் முதல்,...