ஆர்வமுடன் பள்ளிக்கு மாணவர்கள் வந்தனர் கரூர் பெரியாண்டாங்கோயில் பகுதியில் நிறுத்திய பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும்

கரூர், ஜூன். 14: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.முகாமில், கரூர் பெரியாண்டாங்கோயில் பகுதியினர் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: பெரியாண்டாங்கோயில் பகுதியில் 2500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறோம். இந்த பகுதியில் ஏராளமானோர் அரசு பேரூந்தில் பயணம் செய்து வருகின்றனர். இந்த பகுதியின் வழியாக வந்து கொண்டிருந்த பேரூந்துகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக பள்ளிகளுக்கும், வேலைக்கும் செல்லும் மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகிறோம். எனவே, கரூர் செல்லும் பேரூந்துகள் எங்கள் பகுதியின் வழியாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: