கரூர் சுக்காலியூர் அருகே புதர் மண்டிக்கிடக்கும் பாசனவாய்க்கால்

கரூர், ஜூன்14: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சுக்காலியூர் அருகே செல்லும் பாசன வாய்க்கால் புதர் மண்டி மோசமான நிலையில் உள்ளது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சுக்காலியூர் அருகே அமராவதி தடுப்பணை பகுதியில் இருந்து பாசன வாய்க்கால் பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறது. அதில், ஒரு வாய்க்கால் சுக்காலியூர் பகுதியின் வழியாகவும் செல்கிறது. இந்த வாய்க்கால் சரிவர சீரமைக்கப்படாமல் புதர்கள் மண்டி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தண்ணீர் வரும் பட்சத்தில் புதர்கள் மண்டியுள்ளதால் தண்ணீர் செல்வது தடைபடும் எனவும் கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு புதர்கள் மண்டி உள்ள இதனை சரி செய்து, எளிதாக தண்ணீர் செல்லும் வகையில் தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: