நெல்லையில் இருவருக்கு கொரோனா

நெல்லை, ஜூன் 14: நெல்லை  மாவட்டத்தில் கடந்த வாரம் சராசரியாக தினமும் ஒருவர் என்ற விகிதம் கொரோனா  பரவல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இருவருக்கும்,  நேற்று இருவருக்கும் கொரோனா வைரஸ் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.  இவர்கள் மாநகர பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். தனியார் ஆய்வகத்தில்  மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அரசு  மருத்துவ கல்லூரி ஆய்வகத்தில் தற்போது சராசரியாக 20 முதல் 40 பேருக்கு  ெகாரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்தாலும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.  மாநகர பகுதியில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவ தொடங்கி உள்ளதால்  பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து  வருகின்றனர்.

Related Stories: