நெல்லை மேற்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் பொறுப்பேற்பு

நெல்லை, ஜூன் 14: நெல்லை மாநகர மேற்கு மண்டல புதிய போலீஸ் துணை கமிஷனராக சரவணகுமார் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். நெல்லை மாநகர மேற்கு மண்டல போலீஸ் துணை கமிஷனராக இருந்த கே. சுரேஷ்குமார், திருச்சி மாநகர தலைமையிட போலீஸ் துணை கமிஷனராக மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக விருதுநகர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி சரவணகுமார் பதவி உயர்வு பெற்று நெல்லை மாநகர மேற்கு மண்டல போலீஸ் துணை கமிஷனராக நேற்று பொறுப்பேற்றார்.இவர் கடந்த 2009ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று முதன் முதலாக விழுப்புரம் மாவட்டத்தில் பயிற்சி டிஎஸ்பியாகவும், கள்ளக்குறிச்சி, உசிலம்பட்டி, சிவகாசி, மயிலாடுதுறை, ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகளில் டிஎஸ்பியாக பணியாற்றியர். கடந்த 2918ம் ஆண்டு ஏடிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்று கியூ பிரிவு, சென்னை, விருதுநகரில் பணியாற்றிய இவர், கடந்த வாரம் பதவி உயர்வு பெற்று நெல்லை மாநகர மேற்கு மண்டல போலீஸ் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.

Related Stories: