ராஜபாளையத்தில் காற்று மழையால் மரங்கள் சாய்ந்தன

ராஜபாளையம், ஜூன் 14: ராஜபாளையம் பகுதியில் நேற்று மாலையில் காற்று, இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.ராஜபாளையம் பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயில் கடுமையாக அடித்த நிலையில் திடீரென்று மழை பெய்தது. காற்று, இடி மின்னலுடன் பெய்த மழை காரணமாக பழைய பஸ் நிலையம் அருகே காமராஜ் நகர், டிபி மில்ஸ் சாலையில் இரண்டு மரங்கள் சாய்ந்தன. இதை தீயணைப்பு வீரர்கள் அகற்றினார்கள்.

இதனால் போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது. ராஜபாளையம் பொன்விழா மைதானம், காந்தி சிலை ரவுண்டானா, சங்கரன்கோவில் முக்கு போன்ற தாழ்வான பகுதிகளில் மழைநீர் சாக்கடையில் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். எனினும் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதியடைந்தனர். மழையை நம்பி இருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Related Stories: