ஆதார் சேவைகளுக்கு சிறப்பு முகாம்

ராஜபாளையம், ஜூன் 14: ராஜபாளையம் நகர் 13வது வார்டு இல்லத்துபிள்ளைமார் திருமண மண்டபத்தில் ஆதார் அட்டையில் திருத்தம், புதிய ஆதார் அட்டை எடுத்தல் போன்ற சேவைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் ராஜபாளையம் எம்எல்ஏ தங்கப்பாண்டியன் கலந்து கொண்டு முகாமை ஏற்பாடு செய்த சாலினி சரவணன், கவுன்சிலருக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டார்.இதுபோல் அனைத்து கவுன்சிலர்களுக்கும் பொதுமக்களுக்கு சேவையாற்றிட வேண்டுமென கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் (வடக்கு), மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி, கவுன்சிலர்கள் சபீனா, ஜெகதீஸ்வரி வார்டு செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: