ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி

வத்திராயிருப்பு, ஜூன் 14: கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவௌியை போக்கும் வகையில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கும் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி மாவட்ட ஆசிரியா் பயிற்சி மற்றும் கல்வி நிறுவனத்தின் சார்ாில் நடத்திட உத்தரவிடப்பட்டது. அதன்படி வத்திராயிருப்பு வட்டார வளமையத்திற்கு உட்பட்ட மகாராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற்றது.பயிற்சியில் 116 ஆசிரியா்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனா். பயிற்சி மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் திட்ட அலுவலா் பூமிநாதன் தலைமையில் வட்டார கல்வி அலுவலா்கள் முருகேசன் சீனிவாசன் ஆகியோர் மேற்பாா்வையில் நடைபெற்றது. பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியா்களுக்கு மாணவா்களின் கற்றலில் கவனக்குறிப்பு ஏற்படும் வண்ணம் தமிழ் ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கான பாடல் களம், படித்தல் களம், கதை களம், கலையும் கைவண்ணமும் களம், செயல்பாட்டுக்களம் அமைத்து கற்றல் கற்பித்தல் உபகரனங்களின் உதவியுடன் பயிற்சி அளிக்கப்பட்டது.மாவட்ட ஆட்சியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் பொறுப்பு மணிவண்ணன் பார்வையிட்டார். குழந்தைகளின் ஆா்வத்தை முழுமையாக கற்றலில் ஈடுபடுத்துவதற்கு இப்பயிற்சி பயனுள்ள வகையில் அமைந்ததாக ஆசிரியா்கள் கருத்த தொிவித்தனா். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வள மைய மேற்பார்வையாளா் பொறுப்பு கணேஷ்வாி செய்திருந்தார். பயிற்சி கருத்தாளா்களாக ஆசிரியா்களும் ஆசிரிய பயிற்றுனா்களும் செயல் பட்டனா்.

Related Stories: