இன்று மின்தடை

காரைக்குடி/திருப்புத்தூர், ஜூன் 14: காரைக்குடி அருகே சாக்கவயல் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளது. இதனை முன்னிட்டு காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வீரசேகரபுரம், கருணாவல்குடி, மித்ரன்குடி, பீர்கலைக்காடு, ஜெயம்கொண்டான், சிறுகப்பட்டி, செங்கரை, புதுவயல், கண்டனூர், சாக்கவயல், மித்ராவயல், திருத்தங்கூர், மாத்தூர், இலுப்பகுடி, லட்சுமி நகர், பொன்நகர் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.  இதேபோல் திருப்புத்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட திருப்புத்தூர் மற்றும் எஸ்.புதூர் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை திருப்புத்தூர், பிள்ளையார்பட்டி, கருப்பூர், தென்கரை, திருக்கோஷ்டியூர், மல்லாக்கோட்டை, எஸ்.புதூர், புழுதிப்பட்டி, கட்டுக்குடிபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது என்று திருப்புத்தூர் துணை மின்நிலையத்தின் செயற்பொறியாளர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.

Related Stories: