பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு

கீழக்கரை, ஜூன் 14:  தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து நேற்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டனர். உற்சாகத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர். கீழக்கரையில் அனைத்து பள்ளிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு மாணவர்களை வரவேற்றனர். அனைத்து பள்ளிகளிலும் தாளாளர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மாணவர்களை வரவேற்று இனிப்புகள் வழங்கினர். இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் தாளாளர் முகைதீன் இப்ராகிம் மற்றும் முஹைதீனியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் மவுலா முகைதீன் மாணவர்களை வரவேற்று இனிப்புகள் வழங்கினர்.

Related Stories: