கமுதி அருகே கோயிலில் பூட்டை உடைத்து திருட்டு

கமுதி, ஜூன் 14:  கமுதி அருகே கோயில் கருவறை பூட்டை உடைத்து அம்மன் தாலி, வெண்கல விளக்குகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கமுதி அருகே திருவரை கிராமத்தின் காட்டு பகுதியில் முத்துகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள கருவறை பூட்டு உடைக்கப்பட்டு அம்மன் கழுத்தில் இருந்த அரை பவுன் தாலி மற்றும் பெரிய வெண்கல விளக்குகள் இரண்டு மற்றும் 20 சிறிய வெண்கல விளக்குகள் மர்ம நபர்களால் திருடப்பட்டு உள்ளன. நேற்று காலை பூஜை செய்ய வந்த கோவில் பூசாரி கருவறை பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு, கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, சப் -இன்ஸ்பெக்டர் சிராஜூதீன் தலைமைலான போலீசார் விசாரணை நடத்தினர். இது குறித்து கோவிலாங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.  

Related Stories: