கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா

பல்லடம்,ஜூன்14: பல்லடம் அருகேயுள்ள சென்னிமலைப்பாளையத்தில் பல்லடம் கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் பிறந்த நாள் விழா கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது.விழாவிற்குபல்லடம் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். இப்போட்டியில் பல்லடம்  சுற்று வட்டாரத்தை சேர்ந்த 40 அணிகள் கலந்து கொண்டன. அதில் இறுதி போட்டியில் கரைப்புதூர் சி.ஆர்.அணி வெற்றி பெற்றது. அந்த அணிக்கு கலைஞர் பிறந்த நாள் நினைவு கோப்பையை திருப்பூர் வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் இல.பத்மநாபன் வழங்கினார். சான்றிதழ்கள் மற்றும் பரிசு தொகையை பல்லடம் கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் சோமசுந்தரம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், சார்பு அமைப்பினர் பங்கேற்றனர்.

Related Stories: