திருப்பூர் மாநகர காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் தேர்தல்

திருப்பூர், ஜூன் 14: திருப்பூர் மாநகர காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தேர்தல், மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமையில் நேற்று நடந்தது. தேர்தல் பொறுப்பாளர் பாலக்காடு முன்னாள் சேர்மன் ராஜேஷ் முன்னிலை வகித்தார். கரூர் மாவட்ட நிர்வாகிகள் (பி.ஆர்.ஓ) கலந்துகொண்டனர். திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூத் கமிட்டி, டிவிசன் சர்க்கிள் நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. மாநகராட்சி வார்டுகள், வடக்குத் தொகுதி வட்டார நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் பனியன் தொழிலுக்கு தேவையான நூல் விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும். திருப்பூர் மாநகராட்சி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் காய்கறி மார்க்கெட், பஸ் நிலையத்திற்கு திருப்பூர் குமரன் பெயரை வைக்க வேண்டும். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது பொய் வழக்குப் போடும் மத்திய அரசை கண்டிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: