பரணி, கார்த்திகை மேளதாளத்துடன் வழியனுப்பி வைத்தனர்

திருப்பூர் 15 வேலம்பாளையம்  நகராட்சி நடுநிலைப்பள்ளி இருந்து 8-ம் வகுப்பு முடித்து 9-ம் வகுப்புக்கு  செல்லும் மாணவ-மாணவியரை  மேளதாளத்துடன் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தலைமை ஆசிரியை  மற்றும் ஆசிரியர்கள் அனுப்பி வைத்தனர். முன்னதாக  நேற்று பள்ளிக்கு வந்த  மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்தும், இனிப்புகள்  வழங்கியும் உற்சாகத்துடன் வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி 1-வது  மண்டலத் தலைவர் உமாமகேஸ்வரி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்  செல்வி, 11வது வார்டு கவுன்சிலர் செல்வராஜ், வட்டாரக் கல்வி அலுவலர்  சின்னக்கண்ணு, சித்ரா, கல்வியாளர் சுவாமிநாதன், பெற்றோர் ஆசிரியர் சங்க  பொருளாளர் சிட்டி வெங்கடாச்சலம், தலைமை ஆசிரியை ராதாமணி ஆகியோர் கலந்து  கொண்டு மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினர்.

Related Stories: