பேப்பர் கப்புகளை பயன்படுத்திய தனியார் ஓட்டலுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

ஊட்டி,ஜூன்14:நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி வீசக்கூடிய பிளாஸ்டிக் கப்புகள், தட்டுகள் மற்றும் கேரி பேக்குகள் ஆகியவைகளுக்கு நீலகிரியில் தடை விதிக்கப்பட்டது.  தடையை மீறி ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விற்பனை செய்யும் மற்றும் பயன்படுத்தும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊட்டி அருகேயுள்ள பெர்ன்ஹில் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியுள்ளனர். இதனை அறிந்து அங்குச் சென்ற நகர் நல அலுவலர் ஸ்ரீதர் தலைமையிலான சுகாதாரத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட தனியார் ஓட்டல் நிர்வாகத்திற்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர். தொடர்ந்து இது போன்று தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்துவது தெரிய வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

Related Stories: