விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் 21ம் தேதி ஊட்டியில் நடக்கிறது

ஊட்டி, ஜூன் 14:  நீலகிரி மாவட்டத்தில் வரும் 21ம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் வரும் 21ம் தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மற்றும் இயற்கை விவசாய குழு கூட்டம் ஆகியவை ஊட்டி, பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள கூடுதல் கலெக்டர் அலுவலக அரங்கில் நடக்கவுள்ளது.கலெக்டர் அம்ரித், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துக் கொள்கின்றனர். எனவே, விவசாயிகள் விவசாயம் சார்ந்த குறைகள் ஏதேனும் இருப்பின், மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக தெரிவிக்கலாம். மேலும், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க சமூக இடைவெளி பின்பற்றி இக்கூட்டம் நடக்கும். விவசாயிகள், விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் இக்கூட்டத்தில் கலந்துக் ெகாள்ளலாம். இவ்வாறு இணை இயக்குநர் கூறியுள்ளார்.

Related Stories: