அஞ்சலக வாடிக்கையாளர் குறை தீர்க்கும் கூட்டம் கோவையில் 28ம் தேதி நடக்கிறது

ஊட்டி, ஜூன் 14: கோவை அஞ்சலக கண்காணிப்பாளர் தனலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, வாடிக்கையாளர்களின் குறைகள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நேரடியாகக் கேட்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள்  உடனுக்குடன் எடுத்து வரப்படுகின்றன. 30.06.2022 அன்று முடிவடையும் காலாண்டிற்கான வாடிக்கையாளர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல், மேற்கு மண்டலம், கோவை 641 002 அலுவலகத்தில் 28ம் தேதி அன்று காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது.அஞ்சலக சேவை சம்பந்தமாக புகார் மற்றும் குறைகள் ஏதேனும் இருப்பின் கடிதம் மூலமாக, உதவி இயக்குனர், மேற்கு மண்டலம், கோவை 641 002 என்ற விலாசத்திற்கு  உறை மேல் “வாடிக்கையாளர் குறை தீர்க்கும் கூட்டம் சம்பந்தமாக”  என்று குறிப்பிட்டு 17ம் தேதிக்குள் வந்து சேரும்படி, அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அஞ்சல கண்காணிப்பாளர் தனலட்சுமி கூறியுள்ளார்.

Related Stories: