கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற குந்தை சீமை பார்பத்திக்கு பாராட்டு விழா

மஞ்சூர், ஜூன்.14:  நீலகிரி மாவட்டம் குந்தை சீமை பார்பத்தியாக இருப்பவர் அன்னமலை முருகேசன். மனித உரிமை விழிப்புணர்வு இயக்கத்தின் நிறுவன தலைவராக உள்ள இவர் மனித உரிமைகள், அனைவருக்கும் கல்வி உள்பட ஏராளமான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தியுள்ளார்.இந்திய காபி வாரியத்தின் துணை தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள அன்னமலை முருகேசனின் சமூக பணிகளை பாராட்டி பாரத்ஜோதி விருது உள்பட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற விழாவில் கவுரவ டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் குந்தை சீமை பார்பத்தியாக பொறுப்பேற்று 10 ஆண்டுகள் நிறைவு மற்றும் கவுரவ டாக்டர் பெற்றதற்கு பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு ஆரி தலைமை தாங்கினார். கெரப்பாடு ஊர் தலைவர் அர்ஜூனன், மோகன்தாஸ், மட்டகண்டி ஊர் தலைவர் நஞ்சுண்டராஜ், வசந்தராஜன், வாசுதேவன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். சிறப்பு விருந்தினராக முள்ளிகூர் போஜாகவுடர் கலந்து கொண்டு அன்னமலை முருகேசனின் சமூக பணிகளை பாராட்டி பேசியதுடன் படுகர் சமுதாயத்தின் சிறப்புகளை விளக்கினார். விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.  டிரஸ்ட் அறங்காவலர் மணிவேல் நன்றி கூறினார்.

Related Stories: