கொரோனா காரணமாக ரத்தான 1ம் தேதி முதல் ஓய்வூதியர் நேர்காணல் நடத்த முடிவு

ஈரோடு, ஜூன் 14: கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்ட ஓய்வூதியர் நேர்காணல் வருகின்ற 1ம் தேதி முதல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக  அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வூதியம் பெற்று வரும்  ஓய்வூதியதாரர்கள் ஆண்டுதோறும் தங்களது வாழ்வு சான்று சமர்பிக்க வேண்டும்.  மாவட்ட கருவூலம், ஓய்வூதியம் பெறும் வங்கி, அஞ்சலகம், இ-சேவை மையம்  போன்றவை மூலம் வாழ்வு சான்று சமர்பிக்கலாம்.

கொரோனா தொற்று பரவல்  காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஓய்வூதியர்களுக்கான நேர்காணல் நடத்தப்படவில்லை.  இந்நிலையில், ஓய்வூதியர்கள் வரும் ஜூலை 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம்  தேதிக்குள் நேர்காணலில் பங்கேற்க வேண்டும் என்றும், நேர்காணலுக்கு  செல்வோர், தங்களது ஆதார் கார்டு, ஓய்வூதிய புத்தகம், வங்கி கணக்கு  புத்தகம், கைபேசி ஆகியவற்றை எடுத்து செல்ல வேண்டும் என அதிகாரிகள்  கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories: