கஞ்சா விற்ற 4 பேர் கைது

ஈரோடு, ஜூன் 14: பெருந்துறை  பணிக்கம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பெருந்துறை  போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. போலீசார்  அப்பகுதியில் சோதனை நடத்தினர். இதில் ஒடிசா மாநிலம், பார்கரா மாவட்டத்தை  சேர்ந்த சுதா பாத்தனி  (27), தீபக்பூகி (19) ஆகிய 2 பேரும் தலா 100 கிராம்  கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த  போலீசார் ரூ.1000 மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதே போல  பணிக்கம்பாளையம் கேஸ் குடோன் அருகில் நடத்தப்பட்ட சோதனையில் ஒடிசா  மாநிலத்தை சேர்ந்த கிபில்ஷேக்(27), பிந்தோஸ்ஷேக்(19) ஆகிய இருவரையும் கைது  செய்தனர்.

Related Stories: