கோபி மொடச்சூரில்தாய் சேய் நலவிடுதி திறப்பு

கோபி, ஜூன் 14: கோபி அருகே உள்ள மொடச்சூரில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடம் பல ஆண்டுகளாக பயன்படுத்தாத நிலையில் இருந்து வந்தது.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கட்டிடத்தை ஆய்வு செய்த கோபி நகராட்சி தலைவர் நாகராஜ், ஆணையாளர் பிரேம் ஆனந்த் ஆகியோர் கட்டிடத்தை பராமரித்து தாய்சேய் நலவிடுதியாக மாற்ற முடிவு செய்தனர். அதைத்தொடர்ந்து 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடைபெற்றது.நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த் தலைமையில், பொறியாளர் சுப்பிரமணியன் முன்னிலையில் நடைபெற்ற திறப்பு விழாவில் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், கோபி நகராட்சி தலைவர் நாகராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தாய்சேய் நலவிடுதியை  திறந்து வைத்து குத்து விளக்கேற்றினர்.நிகழ்ச்சியில் சுகாதார அலுவலர் சோழராஜ், ஆய்வாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் கோமதி, துணைத்தலைவர் தீபா, கவுன்சிலர்கள் விஜய் கருப்புசாமி, ஹக்கீம், பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: