பூண்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்: வளர்ச்சி பணிகள் குறித்து தீர்மானம்

திருவள்ளூர்: பூண்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.திருவள்ளூர் அடுத்த பூண்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் அலுவலகத்தில் மன்ற கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் பி.வெங்கட்ரமணா தலைமை வகித்தார். ஒன்றிய குழு துணைத் தலைவர் மகாலட்சுமி மோதிலால், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே.கலைச்செல்வி, மேலாளர் (நிர்வாகம்) பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் நா.பேபி பாலாஜி, கே.காயத்ரி லட்சுமிகாந்தன், ஏ.தேன்மொழி ஏழுமலை, வி.மணி, எம்.பாலாஜி, வி.சண்முகம், ஜி.யசோதா கோவிந்தசாமி, எஸ்.ஞானமுத்து, ஏ.வெங்கடேசன், வி.விஜி, பா.சுபாஷினி பாஸ்கர், மோ.சுலோச்சனா மோகன்ராவ், ரெஜீலா மோசஸ், லி.மஞ்சு லிங்கேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் 15வது நிதிக்குழு மானியம் ரூ2 கோடியே 58 லட்சத்து 28 ஆயிரத்து 288 ஒதுக்கீடு வரப்பட்டுள்ளது. எனவே இந்த நிதியிலிருந்து ஒவ்வொரு ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கும் தலா ரூ8 லட்சம் ஒதுக்கீடு செய்வது, இந்த நிதியின் மூலம் அனைத்து ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பகுதிகளிலும் குடிநீர் பிரச்னையை தீர்ப்பது, பழுதடைந்த சாலைகளை சீரமைப்பது, புதியதாக தார் சாலைகள் மற்றும் சிமென்ட் சாலைகள் அமைப்பது உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: