கொரோனா தடுப்பூசி முகாம்: நாளை நடக்கிறது

திருவள்ளூர்: கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வௌியிட்ட அறிக்கை:தமிழக அரசின் உத்தரவின்படி மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை (12ம் தேதி) நடைபெறவுள்ளது. இந்த மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் 1100 தடுப்பூசி மையங்களில் 4400 பணியாளர்கள் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் கோவாக்சின் 68950, கோவிஷீல்ட் 258190 மற்றும் கோர்பிவேக்ஸ் 42780 ஆகிய தடுப்பூசி கையிருப்பு உள்ளது. எனவே நாளை நடைபெறும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் மாவட்டத்தில் இதுநாள் வரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் 2ஆம் தவணை மற்றும் முன்னெச்சரிக்கை தவணைக்கான தகுதிவாய்ந்த நபர்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்தி இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திகொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: