சேர்ந்தமங்கலம் ஊராட்சியில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து முகாம்

ஸ்ரீபெரும்புதூர்: தமிழகத்தில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளை நலமுடன் வளர்க்கும் நோக்கத்துடன் ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.இதனையடுத்து ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிய ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் பிறந்த குழந்தை முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வரை உயரம், எடை கண்காணிக்கும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் சேந்தமங்கலம் ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியும் முகாம் ஊராட்சி மன்ற தலைவர் சார்லஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ள குழந்தைகளை கண்டறிந்து அந்த குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவு முறைகள் குறித்து பெற்றோர்களுக்கு கவுன்சிலிங் மற்றும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Related Stories: