காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருத்துறைப்பூண்டி, ஜூன் 11: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்ட அளவிலான எரிவாயு சிலிண்டர் குறித்த நுகர்வோர் குறைதீர் கூட்டம் மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா தலைமையிலும், வட்ட வழங்கல் அலுவலர் மலர்கொடி முன்னிலையிலும் நடைப்பெற்றது.கூட்டத்தில் சீரான சிலிண்டர் விநியோகம், சிலிண்டர் கையாளும் முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துதல், அரசு சிலிண்டர் விநியோகம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார், நாச்சிகுளம் நுகர்வோர் அமைப்பு தலைவர் பொன் வேம்பையன், கேஸ் விநியோக ஏஜென்ஸிகளின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.

Related Stories: