திருவாரூர் பழைய பஸ் நிலையத்தை சுற்றி உள்ள சாலைகளை சீரமைக்க கோரிக்கை

திருவாரூர், ஜூன் 11: திருவாரூர் பழைய பேருந்து நிலைய சாலைகளை சீரமைக்க கோரி எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தை சுற்றி உள்ள சாலைகள் பழுதடைந்துள்ள அதன் காரணமாக அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் அதனை உடனடியாக சரி செய்திட வேண்டும், மற்றும் மழைநீர் வடிகால்களை சுத்தம் செய்து சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியின் நகர தலைவர் முகம்மது சரீப் மற்றும் பொறுப்பாளர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

Related Stories: