மன்னார்குடியில் ஸ்கூட்டி மீது கார் மோதி ஓய்வுபெற்ற ஆசிரியை பலி

மன்னார்குடி, ஜூன் 11: மன்னார்குடி அருகே ஸ்கூட்டி மீது கார் மோதிய விபத்தில் ஓய்வுபெற்ற அங்கன்வாடி ஆசிரியை பலியானார்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கோப்பிரளயம் பகுதியை சேர்ந்தவர் சுசீலா (64). ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஆசிரியை. இவருக்கு சரஸ்வதி என்ற மகளும், ராஜா, அசோக்குமார் என இரண்டு மகன்களும் உள்ளனர். நேற்று காலை இவர் தனது வீட்டில் இருந்து ஸ்கூட்டியில் மதுக்கூர் சாலையில் சென்றார். அப்போது மன்னார்குடியில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்ற கார் மாடர்ன் நகர் என்ற இடத்தில் சுசீலா ஒட்டி வந்த ஸ்கூட்டி மீது நேருக்கு நேர் மோதியது. இதில் பலத்த காயமடைந்து கீழே விழுந்தார். அருகிலிருந்தவர்கள் சுசீலாவை மீட்டு மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோ தித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த டவுன் எஸ்ஐ முருகன் உள்ளிட்ட போலீசார் சுசீலாவின் உடலை கைப்பற்றி அதே மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: